ADDED : ஆக 09, 2024 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு இசைப்பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவசஇசைக்கருவிகள், பாடப் புத்தகங்கள், கச்சேரி ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அதன் முதன்மைச் செயலாளர் இளங்கோ தலைமை வகித்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள இலவச இசைக்கருவிகள், பாடப் புத்தகங்கள், கச்சேரி ஆடைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் சரவணமாணிக்கம், ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் பங்கேற்றனர்.

