/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குற்றச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா அவசியம்
/
குற்றச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா அவசியம்
குற்றச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா அவசியம்
குற்றச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா அவசியம்
ADDED : ஜூன் 11, 2024 10:51 PM

திருவாடானை : குற்றங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கேமரா அவசியமாகிறது என ராமநாதபுரம் எஸ்.பி.சந்தீஷ் பேசினார்.
திருவாடானையில் ஓரியூர், சன்னதிதெரு நான்கு முனை சந்திக்கும் ரோட்டில் கண்காணிப்பு கேமரா அமைக்கபட்டு, அதற்கான துவக்க விழா நடந்தது.
ராமநாதபுரம் எஸ்.பி.சந்திஷ் துவக்கி வைத்து பேசியதாவது- குற்றங்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் தேவைபடுவது போல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியமாகிறது. உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் கண்காணிப்பு கேமரா இருப்பது தெரிந்தால், குற்றம் செய்ய முயற்சி செய்பவர்கள் கேமரா இருப்பதை பார்த்து மற்றவர்கள் கண்காணிக்கிறார்கள் என்ற அச்சம் ஏற்படும். ஆகவே குற்றங்கள் செய்ய தயங்குவார்கள். ஆகவே முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திருவாடானை நகர் வளர்ச்சி அறக்கட்டளை, நகைக்கடை மற்றும் அடகுக்கடை சங்கம் சார்பில் இக் கேமராக்கள் அமைக்கபட்டது. திருவாடானை டி.எஸ்.பி. நிரேஷ், இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி பங்கேற்றனர். தொண்டியில் 5 கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ன.