/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆக்கிரமிப்பு அட்டகாசத்தில் சிக்கிய சுவாமி, அம்மன்
/
ஆக்கிரமிப்பு அட்டகாசத்தில் சிக்கிய சுவாமி, அம்மன்
ADDED : பிப் 25, 2025 06:58 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் நடக்கும் மாசி சிவராத்திரி திருவிழாவுக்கு சுவாமி, அம்மன் வீதி உலாவின் போது பல்லக்கு ஆக்கிரமிப்பு கடைகளில் சிக்கியது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி சிவராத்திரி திருவிழா பிப்.,18ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் மார்ச் 1 வரை சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்கம், வெள்ளி வாகனம் மற்றும் பல்லக்கில் வீதி உலா வருவது வழக்கம். ஏழாம் நாள் விழாவான நேற்று மாலை கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்க பல்லக்கில் எழுந்தருளி முத்தங்கி சேவையில் காட்சியளித்து வீதி உலா புறப்பாடாகினர்.
கோயில் ரதவீதியில் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்கள் நடமாட முடியாமல் சிரமப்படுவதாகவும், திருவிழா நாளில் சுவாமி, அம்மன் பல்லக்கில் உலா வருகையில் சிக்கல் ஏற்படும். ஆகையால் ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தர்கள் வலியுறுத்தினர். ஆனால் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று மேல ரதவீதியில் சுவாமி, அம்மன் வந்த பல்லக்கு கம்பு ஆக்கிரமிப்பு கடையில் சிக்கியதால் ஊர்வலம் தடுக்கப்பட்டது. பின் கோயில் ஊழியர்கள் ஆக்கிரப்பு கடையின் பந்தலை அகற்றிய பின் அரைமணி நேரத்திற்கு பின்
சுவாமி, அம்மன் மீண்டும் புறப்பாடாகியது. இச்சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.