/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி, அம்மன் வீதியுலா
/
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி, அம்மன் வீதியுலா
ADDED : மே 17, 2024 08:25 PM

ராமேஸ்வரம்:வைகாசி வசந்த உற்சவ விழாவில் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன், நேற்று தங்க கேடயத்தில் எழுந்தருளி சேதுமாதவ தீர்த்த குளத்திற்கு புறப்பாடாகினர்.
அங்கு சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தத பின், தீர்த்த குளத்தைச் சுற்றி சுவாமி, அம்மன் வலம் வந்தனர். கூடியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த வைகாசி உற்சவ விழா மே 23 வரை நடக்கும் என கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
வைகாசி உற்சவ விழா குறித்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு விளம்பரப்படுத்தும். அப்போது ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வர். தற்போது விழா குறித்து உள்ளூர் பக்தர்களுக்கு கூட தெரியவில்லை. இதனால் வைகாசி உற்சவ துவக்க நாளில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

