ADDED : மே 23, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.
நேற்று மூன்றாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடந்தது. விநாயகர், முருகன், பிரியாவிடையுடன் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
