ADDED : மே 11, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:திருவாடானை, தொண்டி பகுதியில் சாலை ஓரங்கள், கண்மாய் கரைகளில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. கண்மாய், குளங்களில் மழை நீர் நிரம்பி உள்ளதால் இந்த ஆண்டு புளி விளைச்சல் அமோகமாக உள்ளது.
வீட்டில் உள்ள பெண் கூலி தொழிலாளர்கள், ஓய்வு நேரத்தில் புளியம் பழத்திலிருந்து கிடைக்கும் புளியங்கொட்டையை சேகரித்து விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ ரூ.20க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர்.