/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காமராஜர்புரத்தில் மண் ரோடாக மாறிய தார் ரோடு: மக்கள் அவதி
/
காமராஜர்புரத்தில் மண் ரோடாக மாறிய தார் ரோடு: மக்கள் அவதி
காமராஜர்புரத்தில் மண் ரோடாக மாறிய தார் ரோடு: மக்கள் அவதி
காமராஜர்புரத்தில் மண் ரோடாக மாறிய தார் ரோடு: மக்கள் அவதி
ADDED : ஜூலை 09, 2024 05:00 AM

சிக்கல்: சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சியில் காமராஜர்புரம் கிராமத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்து மண் ரோடாக மாறியுள்ளது.
கடந்த 2005ல் அமைக்கப்பட்ட தார் ரோட்டில் அதன் பிறகு எவ்வித பராமரிப்பும் இல்லாததால் முழுவதும் மண்மேவி குண்டும் குழியுமாக மாறியது. ரோட்டின் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து காயமடைகின்றனர்.
காமராஜர்புரத்தில் இருந்து சிறைக்குளம் வரை 2 கி.மீ., க்கு சேதமடைந்த ரோடு முழுவதும் வயல்வெளி மண்ணால் சூழப்பட்டுள்ளதால் ரோடு இருந்ததற்கான அடையாளம் இன்றி காணப்படுகிறது.
எனவே கடலாடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் இந்த ரோட்டை ஆய்வு செய்து மீண்டும் சீரமைத்து புதிய தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜர்புரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.