/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அருகே டாஸ்மாக்கில் தகராறு: வாலிபருக்கு வெட்டு
/
பரமக்குடி அருகே டாஸ்மாக்கில் தகராறு: வாலிபருக்கு வெட்டு
பரமக்குடி அருகே டாஸ்மாக்கில் தகராறு: வாலிபருக்கு வெட்டு
பரமக்குடி அருகே டாஸ்மாக்கில் தகராறு: வாலிபருக்கு வெட்டு
ADDED : ஆக 22, 2024 02:24 AM
ஒருவர் கைது
பரமக்குடி: -பரமக்குடி அருகே உரப்புளி டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை வெட்டிவிட்டு தப்பிய நால்வரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடி புளிய மரத்தெருவை சேர்ந்தவர் சபரி கணேஷ் 28. இவர் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு உரப்புளி டாஸ்மாக் பாரில் இருந்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த சிலருடன் பேசிக் கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டது.
அப்போது சபரி கணேஷ்சை ஒரு கும்பல் தலை மற்றும் கைவிரலில் வாளால் வெட்டிவிட்டு தப்பினர். போலீசார் வாளை கைப்பற்றி சபரி கணேஷ்சை பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பரமக்குடி தாலுகா போலீஸ் எஸ்.ஐ., சண்முகவேல் முருகன் வழக்கு பதிந்து எமனேஸ்வரம் ஸ்கந்தகுமாரை 28, கைது செய்தார்.
மேலும் மூவரை தேடுகின்றனர்.