/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை ஒன்றியத்தில் வரி வசூல் தீவிரம்
/
திருவாடானை ஒன்றியத்தில் வரி வசூல் தீவிரம்
ADDED : மார் 06, 2025 03:35 AM
திருவாடானை : திருவாடானை ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளில் வரி வசூல் தீவிரமாக நடக்கிறது. 11 ஊராட்சிகளில் 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டது.திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, நுாலக வரி, உரிம கட்டணம் போன்ற வரி வசூல் பணிகளில் ஊராட்சி செயலர்கள் ஈடுபட்டுள்ளனர். மார்ச் இறுதிக்குள் 100 சதவீதம் வரி வசூலை குறிக்கோளாக கொண்டு இப்பணிகள் நடக்கிறது.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் கூறியதாவது:
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் கருமொழி, காரங்காடு, முகிழ்த்தகம், முள்ளிமுனை, புதுபட்டினம், கலியநகரி, பனஞ்சாயல், புல்லக்கடம்பன், மாவூர், நகரிகாத்தான், பதனக்குடி ஆகிய ஊராட்சிகளில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 80 முதல் 90 சதவீதம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் இறுதிக்குள் வசூல் பணிகளை முடிக்க ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரிகளை செலுத்தி ஒத்துழைக்க வேண்டும் என்றார்.