/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 05, 2024 07:32 PM

ராமநாதபுரம்:தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமர்வேல் முன்னிலை வகித்தார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கல்வி மாவட்ட தலைவர் மாரிச்சாமி, மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் திருமூர்த்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாவட்ட செயலாளர் ராபர்ட் உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.-------