மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள்
ADDED : மே 31, 2026 06:21 PM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை திட்டமிடுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இதன்படி திருவாடானை தாலுகாவில் மக்களின் விபரங்களை சேகரிப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. இது குறித்து திருவாடானை தாசில்தார் ஆண்டி கூறியதாவது:
இந்த பணியை துல்லியமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் பொருட்டு ஆசிரியர்கள் இத்திட்டத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கு படிவங்களை எவ்வாறு நிரப்புவது, விபரங்களை எவ்வாறு சேகரிப்பது என்பது குறித்த சிறப்பு பயிற்சிகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.
ஆசிரியர்கள் மற்றும் கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடுகளுக்கு வரும் போது மக்கள் தங்களை பற்றிய சரியான விபரங்களை வழங்கி முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
