ADDED : ஜூலை 18, 2024 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே ராமநாதபுரம் இரு வழிச் சாலை பொட்டிதட்டி பகுதியில் சரக்கு வாகனம் மோதி டூவீலரில் சென்றவர் பலியானார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே காரைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் 21. இவர் நேற்று மாலை மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் நோக்கி டூவீலரில் சென்றார்.
அப்போது பொட்டிதட்டி பஸ் ஸ்டாப் அருகில் சென்றபோது எதிரில் தேங்காய் ஓடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் வினோத்குமார் சம்பவ இடத்தில் பலியானார். பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.