/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை
/
வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை
ADDED : மார் 31, 2024 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை : -உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோயில் உள்ளது.
நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு மூலவருக்கு காலை 9:00 மணிக்கு பால், பன்னீர், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
கோயில் வளாகத்தில் உள்ள அம்மிக்கல்லில் பெண்கள் பச்சை விரலி மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர்.
எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்டவைகளில் விளக்கேற்றி வழிபட்டனர்.
தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

