/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை
/
வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை
ADDED : ஜூன் 27, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை : -உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் தங்க கவச அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது.
மூலவர் அம்மன் மற்றும் மங்கை மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வராகி அம்மனுக்கு பட்டு சாத்தியும், தங்கக் கவச அலங்காரத்தில் பஞ்சமுக தீபாராதனையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அன்னாச்சி பழம், கிழங்கு வகைகள் பக்தர்கள் நெய்வேத்தியமாக படைத்தனர்.
ஏராளமான பெண்கள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மிக் கல்லில் பச்சை விரலிமஞ்சளை அரைத்து உருண்டைகளாக நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர்.