/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்து மாதமாக காட்சிப்பொருளான அங்கன்வாடி புதிய கட்டடம்
/
பத்து மாதமாக காட்சிப்பொருளான அங்கன்வாடி புதிய கட்டடம்
பத்து மாதமாக காட்சிப்பொருளான அங்கன்வாடி புதிய கட்டடம்
பத்து மாதமாக காட்சிப்பொருளான அங்கன்வாடி புதிய கட்டடம்
ADDED : ஏப் 26, 2024 12:50 AM

கீழக்கரை : கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சி 500 பிளாட் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் அமைந்துள்ளது. கடந்த 2021 --22ம் ஆண்டிற்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.11.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
பத்து மாதங்களுக்கும் மேலாக கட்டப்பட்ட புதிய கட்டடம் தற்போது வரை திறப்பு விழா காணாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. கட்டடத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 20 குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளருடன் பல ஆண்டுகளாக தனியார் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது.
கீழக்கரை அகமது உசேன் கூறியதாவது:
தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட 500 பிளாட் பகுதியில் தனியார்வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வரும் நிலையில் புதிய கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.