/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்கம்பங்களை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியம்
/
மின்கம்பங்களை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஜூலை 23, 2024 04:51 AM
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை புதியதாக மாற்றிய பின் அவற்றை அப்புறப்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியத்தாலக பல மாதங்களாக அதே இடத்தில் கிடக்கின்றன.
கீழக்கரை நகராட்சியில் 1 முதல் 21 வார்டுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட வார்டுகளின் மின்கம்பங்கள் அகற்றப்படாத நிலையில் உள்ளன.
கீழக்கரையை சேர்ந்த மக்கள் டீம் காதர் கூறியதாவது:
கீழக்கரையில் சேதமடைந்த உடைந்து விழும் தருவாயில் உள்ள மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை நட்டுள்ளனர். பயன்படாத மின் கம்பங்களை எடுத்துச் செல்லாமல் அதே இடத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக போட்டுள்ளனர்.
சேதமடைந்து கான்கிரீட் பூச்சுக்களை கொட்டி இரும்பு கம்பிகள்வெளியே தெரியும் நிலையில் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்துள்ளது. எனவே கீழக்கரை துணை மின்நிலைய அலுவலர்கள் மின்கம்பங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.