/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவக்கல்லுாரி செல்லும் தார் ரோட்டின் அவல நிலை
/
மருத்துவக்கல்லுாரி செல்லும் தார் ரோட்டின் அவல நிலை
மருத்துவக்கல்லுாரி செல்லும் தார் ரோட்டின் அவல நிலை
மருத்துவக்கல்லுாரி செல்லும் தார் ரோட்டின் அவல நிலை
ADDED : செப் 12, 2024 04:28 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி 2021 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை எய்ம்ஸ் கல்லுாரி மாணவர்கள் ஆண்டு தோறும் 50 பேர் இதே கல்லுாரியில் தங்கி படிக்கின்றனர். மருத்துவக்கல்லுாரி கட்டடம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் உள்ளது.
இங்கு செல்வதற்கான ரோடு ராமநாதபுரத்தில்இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் இருந்து பிரிந்து கல்லுாரி வரையும், அங்கிருந்து சேதுபதி நகரை இணைக்கும் ரோடு மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது.
இதில் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.