/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறந்த விக்கெட் கீப்பராக முதுகுளத்துார் மாணவி தேர்வு
/
சிறந்த விக்கெட் கீப்பராக முதுகுளத்துார் மாணவி தேர்வு
சிறந்த விக்கெட் கீப்பராக முதுகுளத்துார் மாணவி தேர்வு
சிறந்த விக்கெட் கீப்பராக முதுகுளத்துார் மாணவி தேர்வு
ADDED : ஜூன் 23, 2024 03:42 AM

முதுகுளத்துார்: நேபாளத்தில் நடந்த மகளிர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த விக்கெட் கீப்பராக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கடம்போடை கிராமத்தை சேர்ந்த மாணவி நவீனா 19, தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய பசிபிக் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் 7வது டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி நேபாளத்தில் நடந்தது. இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூட்டான், சிங்கப்பூர் நாடுகளில் இருந்து அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் ராமநாதபுரம் தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., 2ம் ஆண்டு படிக்கும் முதுகுளத்துார் அருகே கடம்போடையை சேர்ந்த சாந்தகுமார் மகள் நவீனா 19, இந்தியாவிற்காக பெண்கள் பிரிவில் பங்கேற்றார்.
பெண்கள் பிரிவில் இந்தியா முதலிடம், நேபாளம் இரண்டாம் இடம் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது. சிறந்த விக்கெட் கீப்பராக நவீனா தேர்வு செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி நவீனாவுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

