/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓரியூர் மகளிர் மன்ற கட்டடத்தில் மோதிய பஸ்
/
ஓரியூர் மகளிர் மன்ற கட்டடத்தில் மோதிய பஸ்
ADDED : ஆக 28, 2024 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : ஆடு குறுக்கே சென்றதால் மகளிர் மன்ற கட்டடத்தில் பஸ் மோதியதில் கட்டடம் சேதமடைந்தது.
திருவாடானை அருகே ஓரியூரிலிருந்து நேற்று காலை 9:30 மணிக்கு தேவகோட்டையை நோக்கி தனியார் பஸ் சென்றது. ஆடு குறுக்கே சென்றதால் டிரைவர் பஸ்சை திருப்ப முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகிலிருந்த மகளிர் மன்ற கட்டடத்தில் மோதியது.
இதில் பஸ் மற்றும் கட்டடத்தின் முன்பக்கம் சேதமடைந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே போல் மகளிர் மன்ற கட்டடம் பூட்டியிருந்ததால் பெண்கள் இல்லை. விபத்து குறித்து எஸ்.பி. பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.