/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காப்பு கட்டுதலுடன் விழா துவக்கம்
/
காப்பு கட்டுதலுடன் விழா துவக்கம்
ADDED : பிப் 25, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே ஏனாதி பூங்குளம் கிராமத்தில் உள்ள பூங்குளத்து அய்யனார், கருப்பண்ணசாமி, சேது மாகாளியம்மன், சுடலை மாடசாமி கோயில் மாசிக்களரி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
பூங்குளத்து அய்யனார், கருப்பண்ணசாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பின்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். பிப்.,28ல் பூஜை பெட்டி துாக்கி வருதல், பூக்குழி இறங்குதல், மார்ச் 1ல் பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டு நடைபெற உள்ளது. முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.