/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சரண் விடுப்பு ஒப்படைப்பை சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பார்
/
சரண் விடுப்பு ஒப்படைப்பை சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பார்
சரண் விடுப்பு ஒப்படைப்பை சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பார்
சரண் விடுப்பு ஒப்படைப்பை சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பார்
ADDED : மார் 10, 2025 06:01 AM

ராமநாதபுரம் : ''கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு சட்டசபை கூட்டத்தொடரில் 110 வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவரும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கு.தியாகராஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம், கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பை சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் ரூ.2152 கோடி வழங்கப்படும் என வஞ்சித்து வருகிறது. தமிழகம் இரு மொழிக்கொள்கையால் தான் கல்வித்துறையில் நாட்டிலேயே 2ம் இடத்தில் உள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகளை தற்போதைய அரசு ரத்து செய்துள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து போராட்டங்கள் ஒடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஏற்கனவே உள்ள பணி விதிகளை கடந்து தான் ஆசிரியர்கள் இயக்கங்களை நடத்தி வருகிறோம்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை கேட்டு அதனை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெற்ற பின் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை அல்லது திருச்சியில் கூடி அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிப்பர் என்றார்.