/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறுபாலம் கட்டும் பணி மும்முரம்
/
சிறுபாலம் கட்டும் பணி மும்முரம்
ADDED : ஜூன் 07, 2024 04:59 AM

கமுதி: கமுதி அருகே பேரையூர் அய்யனார்புரம்கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி முடிவுற்ற நிலையில் தற்போது சிறுபாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
கமுதி அருகே பேரையூர் ஊராட்சி அய்யனார்புரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.சில மாதத்திற்கு முன்பு புதிதாக ரோடு அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டி சமன் செய்யப்பட்டது. பின்பு ரோட்டோரத்தில் ஜல்லிக்கற்கள் குவித்து இருந்தனர்.
புதிய ரோடு அமைக்கப்படாமல் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால்நடப்பதற்கே கிராம மக்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக புதிய ரோடு அமைக்கப்பட்டது. தற்போது மழைநீர் வரத்துக் கால்வாயில் செல்வதற்காக சிறுபாலம் கட்டும் பணி நடக்கிறது.

