/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வந்த மான்
/
தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வந்த மான்
ADDED : ஏப் 28, 2024 06:08 AM

ஆர்.எஸ்.மங்கலம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வறட்சி நிலவுவதால் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை கடுமையாக பாதிப்புஅடைந்துள்ளன.
மேலும் வனப்பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் வன விலங்குகள் நீர் உள்ள கண்மாய், குளங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தேடிச் செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி குடியிருப்பு பகுதியில் குடிநீர் தேடி மான் ஒன்று சென்றது.
மாலை கண்டதும் நாய்கள் துரத்தியதால் மான் கடல் பகுதிக்கு சென்ற நிலையில் அப்பகுதி மக்கள் நாய்களிடமிருந்து மானை காப்பாற்றினர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வன அதிகாரிகளிடம் மான் ஒப்படைக்கப்பட்டது.
எனவே வன விலங்குகளை பாதுகாக்கும் விதமாக வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

