/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீடு கட்டித்தர மருத்துவர் சமுதாய மக்கள் கோரிக்கை
/
வீடு கட்டித்தர மருத்துவர் சமுதாய மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 24, 2024 11:53 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மருத்துவர் சமூக சங்கத்தினர் அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தினர்.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் மருத்துவர் சமூக மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
பரமக்குடி அருகே வேந்தோணி குமரக்குடியில் 1986ல் 84 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வசதியின்றி அவர்களால் அங்கு வீடுகட்ட இயலவில்லை. தற்போது அந்த இடத்தை பறித்து மற்றவர்களுக்கு வழங்க உள்ளதாக கூறுகின்றனர்.
எனவே அரசு சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் மருத்துவர் சமூக மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும் என வலியுத்தினர்.