/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரிய கண்மாயில் படித்துறை வேண்டும்கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை
/
பெரிய கண்மாயில் படித்துறை வேண்டும்கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை
பெரிய கண்மாயில் படித்துறை வேண்டும்கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை
பெரிய கண்மாயில் படித்துறை வேண்டும்கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 16, 2024 04:02 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பெரிய கண்மாயில் புதிதாக ஷட்டர்கள் அமைக்க வேண்டும். தண்ணீரை மக்கள் பயன்படுத்தும் வகையில் 3 படித்துறைகள் அமைக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தினர்.
சுதந்திர தினத்தையொட்டி ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சித் தலைவர் சசிகலா தலைமை வகித்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று ஊராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மடைகளை சீரமைத்து புதிதாக ஷட்டர்கள் அமைக்க வேண்டும். மக்கள் பயன்படுத்தும் வகையில் பெரிய கண்மாயில் 3 படித்துறைகள் கட்டித்தர வேண்டும். அனைத்து பஸ்களும் அச்சுந்தன்வயலில் நின்று செல்ல வேண்டும். தொய்வின்றி காவிரி குடிநீர் வழங்க வேண்டும். புதிய தார் ரோடு, பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். ஊராட்சிகளின் உதவி இயக்குநர் திருப்பதிராஜன், ராமநாதபுரம் பி.டி.ஓ.,க்கள் செந்தாமரை முருகானந்த வள்ளி, ஒன்றியப் பொறியாளர் அருண்பிரசாத், அரசு அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.----

