/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரமாக கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை
/
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரமாக கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரமாக கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரமாக கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 27, 2024 11:36 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ஆர்.காவனுாரில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணியில் சரியாக தண்ணீர் ஊற்றுவது இல்லை, ரோட்டை விட தாழ்வாக உள்ளது. தரமாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதியில் மக்கள் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
ஆர்.காவனுாரில் நயினார்கோவில் ரோட்டோரம் ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. ரோட்டை விட தாழ்வாக பேஸ்மட்டம் உள்ளது. சரியாக தண்ணீர் ஊற்றுவது இல்லை. தரமாக கட்டுமானப் பணி மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கலெக்டர் விசாரித்து தரமாக கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.