/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மன்னார் வளைகுடா கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பு செத்து கரை ஒதுங்குது
/
மன்னார் வளைகுடா கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பு செத்து கரை ஒதுங்குது
மன்னார் வளைகுடா கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பு செத்து கரை ஒதுங்குது
மன்னார் வளைகுடா கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பு செத்து கரை ஒதுங்குது
ADDED : மே 17, 2024 08:47 PM

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ஊராட்சியில் உள்ள ரோஜ்மாநகர், மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள கடலில் தீவுகளுக்கு அருகே சட்ட விரோதமாக 50க்கும் மேற்பட்ட பெரிய நாட்டுப் படகுகளில் வல்லம், இரண்டு மாதமாக வெடி வைத்து மீன் பிடிக்கின்றனர்.
அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்காக மன்னார் வளைகுடா உயிர் கோள காப்பக வனச்சரகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை உயிரினங்களான கடல் பசு, டால்பின், கடல் ஆமை, நீலத்திமிங்கலம், சுறா மீன், பவளப்பாறைகள் உள்ளன. தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால், ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு விசைப்படகுகள் செல்லவில்லை. இந்நிலையில் துாத்துக்குடி மாவட்ட கடற்கரையோர பகுதிகளில் இருந்து இரவு மற்றும் பகல் நேரங்களில் சட்ட விரோதமாக வெடி வைத்து மீன் பிடிப்பதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவித்தனர்.
ரோஜ்மாநகர் மீனவர் பேரின்பம், 40, கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடலில் வெடி வைத்து மீன்பிடிப்பது கிடையாது. ஆனால் அருகில் உள்ள துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார், தருவைகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த இரண்டு மாதமாக 50க்கும் மேற்பட்ட பெரிய வல்லங்களில் வந்து கடலுக்குள் வெடி வைத்து அவற்றின் அதிர்வலைகளால் இறந்து ஒதுங்கும் மீன்களை பிடிக்கின்றனர்.
பொதுவாக கடலுக்குள் வெடிவைத்து மீன் பிடிக்கும் போது அரிய வகை கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் பாதிப்புக்குள்ளாகும். சுயலாபம் கருதி கூட்டமாகத் திரியும் மீன்களை குறி வைத்து அவற்றின் மீது வெடிவைத்து மீன்களை பிடிக்கின்றனர்.
இதனால் பெரிய வகை மீன்கள் ரோஜ்மா நகர் கடற்கரை ஓரங்களில் செத்து கரை ஒதுங்குகிறது. இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதுபோன்ற வெடி வைத்து மீன் பிடிக்கும் செயலை தடுக்க வேண்டும்.
இரு மாவட்ட மீன்வளத் துறையினரும் ஒன்றிணைந்து இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

