/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயிலில் அடிபட்டவர் அடையாளம் தெரிந்தது
/
ரயிலில் அடிபட்டவர் அடையாளம் தெரிந்தது
ADDED : மார் 15, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரயில் விபத்தில் பலியானவர் அடையாளம் தெரிந்ததால் உறவினர்கள் உடலை பெற்றனர்.
இரு தினங்களுக்கு முன் ராமநாதபுரம் சத்திரக்குடி இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயிலில் அடிபட்டு பலியானார். அவர் யார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அவர் பரமக்குடி அருகே எஸ்.கொடிக்குளம் சாத்தையா மகன் காளிதாஸ் 40, என தெரிய வந்தது. இவர் மரம் இழைப்பகத்தில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். ராமநாதபுரம் ரயில்வே எஸ்.ஐ., காளிதாஸ் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தார்.