sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருப்புல்லாணி கோயிலில் ரூ.ஒரு கோடி நகைகள் மாயமான வழக்கில் ஊழியர்களிடம் விசாரணை ஸ்தானிகர் ஆஜராகவும் சம்மன்

/

திருப்புல்லாணி கோயிலில் ரூ.ஒரு கோடி நகைகள் மாயமான வழக்கில் ஊழியர்களிடம் விசாரணை ஸ்தானிகர் ஆஜராகவும் சம்மன்

திருப்புல்லாணி கோயிலில் ரூ.ஒரு கோடி நகைகள் மாயமான வழக்கில் ஊழியர்களிடம் விசாரணை ஸ்தானிகர் ஆஜராகவும் சம்மன்

திருப்புல்லாணி கோயிலில் ரூ.ஒரு கோடி நகைகள் மாயமான வழக்கில் ஊழியர்களிடம் விசாரணை ஸ்தானிகர் ஆஜராகவும் சம்மன்


ADDED : ஏப் 07, 2024 01:23 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்,:-ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோயிலில் ரூ.ஒரு கோடி மதிப்புள்ள நகைகள் மாயமான வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் நேற்று இரு ஊழியர்கள் விசாரணைக்கு ஆஜராயினர். ஸ்தானிகர் சீனிவாசன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பெருமாள், பத்மாசனி தாயாருக்கு அணிவிக்க தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் போன்ற நகைகள் உள்ளன.

இவை கோயில் ஸ்தானிகர் சீனிவாசன் பொறுப்பில் இருந்தன. இதில் ரூ.ஒரு கோடி மதிப்புள்ள 30 தங்கம், 16 வெள்ளி நகைகள் மாயமானது திவான் பழனிவேல் பாண்டியன் ஆய்வில் தெரிந்தது. குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

ஸ்தானிகர் சீனிவாசன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு செய்தார். இம்மனுவுக்கு திவான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் விசாரணை ஏப்.,12க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

போலீசார் கூறியதாவது:

கோயில் நகைகள் குறித்து திவான் 2022 செப்.,ல் நோட்டீஸ் அனுப்பி ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளார். ஸ்தானிகர் சீனிவாசன் இதுபோன்று நோட்டீஸ் அனுப்பிய போதெல்லாம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார். இப்படி இரு முறை நகைகளை ஆய்வு செய்ய வரவில்லை.

தற்போது மூன்றாவது முறையாகவும் ஆய்வு செய்ய வராமல் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார். நேற்று முன் தினம் தான் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கோயில் நகைகள் தவிர்த்து உண்டியலில் சேரும் நகைகளும் ஸ்தானிகர் சீனிவாசன் பொறுப்பில் இருந்துள்ளன. உண்டியலில் சேர்ந்த நகைகளை பெற்றுக்கொண்டதாகவும் சீனிவாசன் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் தற்போது உண்டியல் நகைகள் தன்னிடம் இல்லை என கோயில் நிர்வாகத்திடம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையில் தான் சந்தேகம் எழுந்து ஆய்வு செய்த போது நகைகள் மாயமானது தெரிய வந்துள்ளது. குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் நேற்று கோயில் மேலாளர் ராமு, காசாளர் பாண்டி ஆஜராகினர்.

ஸ்தானிகர் சீனிவாசன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்தானிகர் வாய் திறந்தால் மட்டுமே கோயில் நகைகள் நிலை தெரியும் என்றனர்.----------

பங்குனி திருவிழாவிற்கு நகைகள் இல்லை


பெருமாள், பத்மாசனி தாயாருக்கு அணிவிக்கப்படும் சிறப்பு நகைகள் பெட்டகத்தின் சாவி ஸ்தானிகரிடம் உள்ளது. சுவாமிக்கு சாதாரண காலங்களில் அணிவிக்கப்படும் நகைகள் மட்டுமே பட்டர் பொறுப்பில் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்தானிகர் பெட்டக சாவியை கொடுத்தால் மட்டுமே தற்போது பங்குனி திருவிழாவிற்கு நகைகள் அணிவிக்கப்படும் நிலை உள்ளது.






      Dinamalar
      Follow us