/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பட்டியல் வெளியேற்றத்திற்கு பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்
/
பட்டியல் வெளியேற்றத்திற்கு பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்
பட்டியல் வெளியேற்றத்திற்கு பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்
பட்டியல் வெளியேற்றத்திற்கு பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்
ADDED : ஏப் 11, 2024 06:15 AM
ஆர்.எஸ்.மங்கலம் : தேவேந்திர குல வேளாளர் மக்களின் பட்டியல் வெளியேற்றத்திற்கு சமுதாய மக்கள் மீண்டும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் பேசினார்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ஜான்பாண்டியன் பேசியதாவது: தேவரும், தேவேந்திர குல வேளாளர்களும் ஒன்று சேரவிடாமல் தி.மு.க., உள்ளிட்ட திராவிட கட்சியினர் நம்மை இவ்வளவு காலம் பிரித்து வைத்திருந்தனர்.
தற்போது அண்ணன் ஓ.பி.எஸ்., போட்டியிடுவதன் மூலம் நமது பங்காளிகள் ஒன்று சேர்ந்து விட்டோம்.
இந்த ஒற்றுமையை உலகம் முழுவதும் பறைசாற்றும் வகையில் நமது வெற்றி அமைய வேண்டும்.
ஏழு பிரிவுகளை உள்ளடக்கி நமது சமுதாயத்திற்கு தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணையை பிரதமர் மோடி வழங்கினார். அந்த அரசாணை வழங்குவதற்கு அண்ணன் ஓ.பி.எஸ்., பரிந்துரை செய்தார்.
மீண்டும் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் நமது கோரிக்கையான பட்டியல் இன வெளியேற்ற கோரிக்கை நிறைவேற்றப்படும்.
எனவே, நமக்கு அரசாணை வெளியிட்ட மோடிக்கு நாம் விசுவாசமாக இருக்க வேண்டும்.
எனவே சமுதாய மக்கள் மோடியின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

