/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த பெருமாள்
/
கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த பெருமாள்
ADDED : மார் 15, 2025 05:11 AM

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி கஜேந்திரன் என்ற யானைக்கு மோட்சம் அளித்த லீலையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.
பரமக்குடியில் சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் பரமஸ்வாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உள்ளார். மாசி பவுர்ணமி மகம் விழாவையொட்டி பெருமாள் கருடவாகனத்தில் அமர்ந்தார். மாலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கி அங்குள்ள மண்டகப்படியில் எழுந்தருளினார்.
சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்த வாரி உற்ஸவம் நடந்தது. பின்னர் பெருமாள் கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த லீலையில் அருளினார். பக்தர்களுக்கு தீர்த்த நீர் தெளிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் வைகை ஆற்றில் இருந்து புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பெருமாள் இரவு கோயிலை அடைந்தார். தேவஸ்தான டிரஸ்டிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.