/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறுமியை திருமணம் செய்தவர் சிக்கினார்
/
சிறுமியை திருமணம் செய்தவர் சிக்கினார்
ADDED : மே 02, 2024 05:04 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கே.கே.நகரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதியப்பட்டது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 17 வயது சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரிடம் விசாரித்ததில் தனக்கு 17 வயது என்றும், கே.கே.நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் ரவி 21, என்பவருடன் 2020 மே 27ல் திருமணம் நடந்து ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து அனைத்து மகளிர் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் சிறுமி 14 வயது இருக்கும் போது திருமணம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரவி மீது போக்சோ மற்றும் சிறுமியை திருமணம் செய்தல் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

