/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உறவினர் வீட்டில் நகை பணம் திருடியவர் கைது
/
உறவினர் வீட்டில் நகை பணம் திருடியவர் கைது
ADDED : ஜூலை 13, 2024 04:37 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலேந்தல் பகுதியைச் சேர்ந்த செந்தில் மனைவி சாந்தி 50. இவர் ஜூலை 10ல் மாலை வீட்டை பூட்டி விட்டு வயல் பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை உடைத்து ஒரு லட்சத்து 18 ஆயிரம் பணம், 3 கிராம் தங்க மோதிரத்தை திருடிச்சென்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் சாந்தி புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் சாந்தியின் அக்காள் மகன் ஆர்.எஸ்.மங்கலம் செட்டியமடையை சேர்ந்த இளங்கோவன் 44, திருடியது தெரிய வந்தது. இளங்கோவனை கைது செய்த ஆர்.எஸ். மங்கலம் போலீசார் அவரிடம் இருந்து திருடப்பட்ட பணம் மற்றும் தங்க மோதிரத்தை பறிமுதல் செய்தனர்.