/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தெரு நாய்க்கடியால் அவதிப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு
/
தெரு நாய்க்கடியால் அவதிப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு
தெரு நாய்க்கடியால் அவதிப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு
தெரு நாய்க்கடியால் அவதிப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு
ADDED : ஆக 11, 2024 04:39 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் தெரு நாய்கள் கடிப்பதால் பாதிக்கப்படுவோர் தினசரி 40 பேருக்கும் மேல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தெரு நாய்க்கடிக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இதில் நாளுக்கு நாள் தெரு நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் உணவு கிடைக்காமல் தெருக்களில் அலைந்து திரிந்து வருகின்றன. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தெரு நாய்கள் அதிகம் திரிகின்றன.
இவை தெருக்களில் விளையாடும் சிறு குழந்தைகளை கடிப்பதால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தெருநாய்க்கடிக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இதில் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 40க்கும் மேற்பட்டோர் தெரு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி போட வருகின்றனர்.
ராமநாதபுரம் பகுதியில் மட்டும் 40 பேர் என்றால் பரமக்குடி, ராமேஸ்வரம், சாயல்குடி, முதுகுளத்துார், கமுதி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் நகர் பகுதியில் தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருவில் சுற்றும் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.