/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழமையான பாலம் முழுமையாக அகற்றம்
/
பழமையான பாலம் முழுமையாக அகற்றம்
ADDED : மே 03, 2024 05:14 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பழமையான படகு நிறுத்தும் பாலம் பலமிழந்ததால் முழுவதுமாக அகற்றினர்.
ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில் படகுகள் நிறுத்தவும், மீன்களை இறக்கவும் 1984ல் பாலம் அமைத்து அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., திறந்து வைத்தார்.
இப்பாலத்தில் 100க்கும் மேற்பட்ட படகுகளை நிறுத்தி மீன்கள் வலைகளை இறக்கி, படகிற்கான எரிபொருள், மீன்களை பதப்படுத்த ஐஸ் பார்களை பாலத்தில் இருந்து படகில் ஏற்றி மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
காலப்போக்கில் மீன்துறை அதிகாரிகள் இந்த பாலத்தை பராமரித்து புதுப்பிக்காமல் விட்டனர். இதனால் பாலத்தில் துாண்கள் பலமிழந்து சில இடங்களில் சேதமடைந்து கிடந்ததால் பாலம் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இந்நிலையில் ரூ. 21 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
இதையடுத்து 40 ஆண்டு கால பழமையான பாலத்தை மண் அள்ளும் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி துரிதமாக நடக்கிறது.