/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சி செயலரை தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் காத்திருப்பு போராட்டம் ஊராட்சி செயலர் சங்கம் முடிவு

ADDED : மே 18, 2024 04:55 AM

பெருநாழி : -ஊராட்சி செயலரை தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் பெருந்திரள் காத்திருப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் ஆனந்துார் ஊராட்சி செயலர் செய்யது அபுதாஹிர். உடைந்த பைப் லைனை சரி செய்து கொண்டிருந்த போது அங்கு வந்தவர்கள் ஊராட்சி செயலரின் பணியை தடுத்து நிறுத்தினர்.
வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஊராட்சி செயலர் இருந்த போது அங்கு வந்த ஐந்து பேர் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இரும்பு கதவை உடைத்து கத்தி, இரும்பு ராடு போன்ற ஆயுதங்களால் ஊராட்சி செயலரை தாக்கினர். மயக்கமடைந்த ஊராட்சி செயலரை வி.ஏ.ஓ., ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஐந்து பேரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
சங்க மாவட்டச் செயலாளர் பெருநாழி முருகன் கூறுகையில், அரசு பணியாளர்களுக்கான பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டும்.
ஊராட்சி செயலரை தாக்கிய ஐந்து பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் எஸ்.பி., அலுவலகத்தில் மண்டல அளவிலான பெருந்திரள் முறையீடு மற்றும் காத்திருப்பு போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்றார்.