/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புறம்போக்கு இடத்தில் வீடு கட்டிய மக்கள் வேறு இடம் வழங்க கோரிக்கை
/
புறம்போக்கு இடத்தில் வீடு கட்டிய மக்கள் வேறு இடம் வழங்க கோரிக்கை
புறம்போக்கு இடத்தில் வீடு கட்டிய மக்கள் வேறு இடம் வழங்க கோரிக்கை
புறம்போக்கு இடத்தில் வீடு கட்டிய மக்கள் வேறு இடம் வழங்க கோரிக்கை
ADDED : மே 14, 2024 12:10 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சிபழங்குளம் ஊரில் கண்மாய் அருகேயுள்ள புறம்போக்கில் கட்டியுள்ள வீட்டை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. 40 ஆண்டுகளாக வீடுகட்டி வசிக்கிறோம். மாற்று இடம், நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
பழங்குளம் கண்மாய் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் வசிக்கும் மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், கடந்த 40 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு இடத்தில் 8 பேர்ஓட்டு வீடு கட்டி முறைப்படி வரி செலுத்தி, மின் இணைப்பு பெற்றுள்ளோம். எங்கள் பகுதி நீர்பிடிப்பு பகுதி இல்லை. நீர் வழிப்பாதையும் இல்லை.
சிலரது துாண்டுதலின் பேரில் தற்போது நீர்பிடிப்பு பகுதி எனக் கூறி வீட்டை காலி செய்யக்கோரி பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் மிகவும் மன வேதனை அடைந்து எங்கே செல்வது என தெரியாமல் தவிக்கிறோம். கலெக்டர் நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும்.
வீடுகளை இடிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். உண்மையில் அரசுக்கு தேவைப்படுகிறது என்றால் எடுத்துக்கொண்டு வேறு இடம் வழங்கி அங்கு வீடுகட்டுவதற்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

