/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோட்டக்கரை ஆற்றில் மணல் திருட்டை தடுக்காத போலீசார்
/
கோட்டக்கரை ஆற்றில் மணல் திருட்டை தடுக்காத போலீசார்
கோட்டக்கரை ஆற்றில் மணல் திருட்டை தடுக்காத போலீசார்
கோட்டக்கரை ஆற்றில் மணல் திருட்டை தடுக்காத போலீசார்
ADDED : மார் 25, 2024 06:11 AM
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே மணல் திருட்டு குறித்து ஹலோ போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் அங்கு செல்லாமல் மணல் திருட்டு நடக்கவில்லை என தெரிவித்த போலீசார் குறித்து திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷ் விசாரிக்கிறார்.
கோட்டைக்கரையாறு ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி முதல் ஆனந்துார் வரை ஆற்றில் அதிக மணல் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சனவேலி அருகே கொக்கூரணி ஆற்றுப்பகுதியில் டிராக்டரில் மணல் திருடப்படுவது குறித்து அப்பகுதி கிராமத்தினர் ஹலோ போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் புகார் குறித்து சம்பந்தப்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாவட்ட நிர்வாகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதிக்கு போலீசார் செல்லாமலே தாங்கள் சென்று பார்த்த போது அப்பகுதியில் ஏதும் மணல் திருட்டு நடக்கவில்லை என மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து புகாரை முடித்துள்ளனர்.
அதிகாலை வரை தொடர்ந்து மணல் திருட்டு நடந்த நிலையில் போலீசார் யாரும் வராதது குறித்து நேற்று காலை ஹலோ போலீசுக்கு மீண்டும் கிராமத்தினர் போன் செய்து நேற்று இரவு புகார் குறித்து கேட்டபோது ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது அப்பகுதியில் மணல் திருட்டு ஏதும் நடைபெறவில்லை என தகவல் தெரிவித்தனர்.
புகார் குறித்து சம்பவ இடத்திற்கு வராமல் ஹலோ போலீசுக்கு பொய்யான தகவல் தெரிவித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷிடம் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து டி.எஸ்.பி., சம்பந்தப்பட்ட போலீசார் குறித்து விசாரணை செய்கிறார்.

