/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அய்யனார் கோயிலில் சுவாமி கும்பிடுவதில் பிரச்னை போலீசார் சமரசம்
/
அய்யனார் கோயிலில் சுவாமி கும்பிடுவதில் பிரச்னை போலீசார் சமரசம்
அய்யனார் கோயிலில் சுவாமி கும்பிடுவதில் பிரச்னை போலீசார் சமரசம்
அய்யனார் கோயிலில் சுவாமி கும்பிடுவதில் பிரச்னை போலீசார் சமரசம்
ADDED : ஜூலை 31, 2024 05:13 AM
திருவாடானை : அய்யனார் கோயிலில் குதிரைக்கு கண் திறக்கும் விழாவில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்தனர். இன்று (ஜூலை 31) புரவி எடுப்பு விழா நடக்கிறது.
தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமத்தில் எழுத்தாயிரமுடைய அய்யனார் மற்றும் காளியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயில்களில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது.
இது சம்பந்தமாக ஜூலை 19ல் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம், தாசில்தார் அமர்நாத் தலைமையில் நடந்தது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவின் படி அனைவரும் ஒற்றுமையுடன் திருவிழா நடத்த வேண்டும்.
புரவி எடுப்பு விழாவில் இணைந்து செயல்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு காரணமாக கலைநிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தரப்பில் பேசப்பட்டது.
அதனை தொடர்ந்து ஜூலை 23 ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை குதிரைக்கு கண் திறப்பு விழா நடந்தது. குதிரைக்கு மாலை அணிவிப்பதில் இரு தரப்பினர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர்.
இன்று (ஜூலை 31) புரவி எடுப்பு விழா நடக்கிறது. ஹிந்து அறநிலையத்துறையினர் முன்னிலையில் அக்கோயில் பூஜாரி தலைமையில் விழா நடைபெறும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

