ADDED : ஆக 27, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் ஆராய்ச்சி பிரிவில் பயிலும் மாணவி சுதா அபிராமி முதல்வர் ஸ்டாலினிடம் பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை பெற்றுள்ளார்.
தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரி கணினி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் ஆராய்ச்சி பிரிவில் பயிலும் மாணவி சுதா அபிராமிக்கு ஆக.22ல் முதல்வர் ஸ்டாலின் ஆராய்ச்சி படிப்பிற்காக அரசு வழங்கும் ஊக்க தொகைக்கான ஆணை வழங்கினார்.
தமிழகத்திலேயே கணினி அறிவியல் பிரிவில் முதலாவது இடத்தை பெற்ற மாணவி சுதா அபிராமியை கல்லுாரிச் செயலர் காலித் ஏ.கே.புகாரி, தாளாளர் டாக்டர் ரஹ்மத்து நிஷா, முதல்வர் சுமையா, சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் ஷேக் தாவூத் கான், பேராசிரியர்கள், மாணவிகள், பணியாளர்கள் பாராட்டினர்.

