/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உழவு செய்யப்பட்ட வயலாக மாறிய ரோடு
/
உழவு செய்யப்பட்ட வயலாக மாறிய ரோடு
ADDED : ஜூன் 25, 2024 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே ஊரணிக்கோட்டை- மாணிக்கங்கோட்டை ரோடு சேறும் சகதியுமாக உழவு செய்யப்பட்ட வயல் போல இருப்பதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் மண் ரோடு சகதிக்காடாக மாறிவிட்டது. மாணிக்கங்கோட்டை கிராம மக்கள் கூறியதாவது:
இங்குள்ள 2 கி.மீ., ரோடு முற்றிலும் சேதமடைந்து விட்டது. நடந்து கூட செல்ல முடியவில்லை. சிறுவர்கள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். டூவீலர்களில் செல்பவர்கள் ஓட்ட முடியாமல் தள்ளிக் கொண்டு செல்கின்றனர்.
மழை நீரால் ரோடு சேதம் அதிகரித்து வருவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.