/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்களும் இடம் பெறுபவர் தேர்வுக்குழு உறுப்பினர் நம்பிக்கை
/
இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்களும் இடம் பெறுபவர் தேர்வுக்குழு உறுப்பினர் நம்பிக்கை
இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்களும் இடம் பெறுபவர் தேர்வுக்குழு உறுப்பினர் நம்பிக்கை
இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்களும் இடம் பெறுபவர் தேர்வுக்குழு உறுப்பினர் நம்பிக்கை
ADDED : ஆக 22, 2024 02:43 AM

ராமநாதபுரம்:தமிழகத்தில் சிறந்த ஹாக்கி வீரர்களை ஊக்கப்படுத்தி தொடர் பயிற்சி அளிக்கிறோம். அடுத்த 2 ஆண்டுகளில் அவர்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என இந்திய ஹாக்கிஅணியின் தேர்வுக்குழு உறுப்பினர் முகமது ரியாஸ் தெரிவித்தார்.
இந்திய ஹாக்கி அணி தேர்வுக்குழு உறுப்பினரும், பயிற்சியாளரும் அர்ஜுனா விருது பெற்றவருமான முகமது ரியாஸ், ராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலுமாணிக்கம் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் ஹாக்கி வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். பாரிஸ் ஒலிம்பிக் போட்டி உட்பட நான்கு முறை ஹாக்கியில் வெண்கலப் பதக்கங்கள் வாங்கியுள்ளோம். இந்திய அணி உலகளவில் 5-வது ரேங்கில் உள்ளது. அடுத்த மாதம் சீனாவில் ஆசிய கோப்பையில் விளையாட உள்ளோம்.
தமிழகத்தில் சிறந்த ஹாக்கி வீரர்களை தேர்வு செய்து ஊக்கப்படுத்தி நவீன யுக்திகளை கற்றுத்தருவதற்காக என்னைப் போன்ற பயிற்சியாளர்களை விளையாட்டு அமைச்சர் உதயநிதி தேர்வு செய்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவாரம் வரை பயிற்சிஅளிக்கிறேன்.
தமிழக வீரர் கார்த்திக்செல்வன் ஆசிய கோப்பைக்கான அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இவரைப் போன்ற திறமையான வீரர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு முறையாக மைதானத்தில் பயிற்சி மட்டுமின்றி தங்கு இடத்தில் வசதிகள், நல்ல உணவு, விளையாடுவதற்குரிய சுற்றுச்சூழல் ஆகியவற்றை தமிழக அரசு ஏற்படுத்தி தருகிறது.
அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்கள் இடம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், ஹாக்கி சங்க மாவட்ட செயலாளர் கிழவன் சேதுபதி உடனிருந்தனர்.