ADDED : ஆக 25, 2024 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை:
-கீழக்கரை நகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் கிடைத்தது.
இதையடுத்து கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, கீழக்கரை போலீசார், சுகாதாரத்துறை பணியாளர்கள் குழுவாக இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு கடையில் புகையிலை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அக்கடைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.