/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சொத்தை எழுதிக் கொடுக்காததால் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்
/
சொத்தை எழுதிக் கொடுக்காததால் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்
சொத்தை எழுதிக் கொடுக்காததால் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்
சொத்தை எழுதிக் கொடுக்காததால் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்
ADDED : ஜூலை 03, 2024 02:20 AM

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடை பகுதியைச் சேர்ந்தவர் உலகன் 85. ஒயிலாட்ட பாடல் கலைஞர்.
இவருக்கு இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. நான்கு மகள்கள், ஒரு மகன் வெளியூரில் வசிக்கின்றனர். மணிமாறன் 42, என்ற மகன் மட்டும் ஊரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
உலகன் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் தனியாக பூர்வீக வீட்டில் வசித்து வந்தார். மணிமாறன் சில தெருக்கள் தள்ளி தனியாக வசிக்கிறார். உலகனிடம் சொத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு மணிமாறன் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு உலகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த மணிமாறன் நேற்று முன்தினம் இரவு தந்தை வீட்டுக்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த உலகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினார்.
முதல் மனைவி விவாகரத்து பெற்ற நிலையில் மணிமாறன் வேறு திருமணம் செய்துள்ளார். சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சில மாதங்களுக்கு முன் மணிமாறன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.