/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.,வில் 4 லட்சம் உறுப்பினர் சேர்க்க இலக்கு
/
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.,வில் 4 லட்சம் உறுப்பினர் சேர்க்க இலக்கு
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.,வில் 4 லட்சம் உறுப்பினர் சேர்க்க இலக்கு
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.,வில் 4 லட்சம் உறுப்பினர் சேர்க்க இலக்கு
ADDED : செப் 04, 2024 01:01 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. 45 நாட்களில் 4 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க பா.ஜ.,அகில இந்திய தலைமை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
ராமநாதபுரத்தில் மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நடந்தது. ராமநாதபுரம் மூத்த தலைவர் சுப.நாகராஜன் உறுப்பினராக புதுப்பித்து பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன், ஊடகப்பிரிவு தலைவர் குமரன், நகர் தலைவர் கார்த்திகேயன், எஸ்.சி., அணி தலைவர் நேதாஜி, ஊடக பிரிவு செயலாளர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.
மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் கூறுகையில், பா.ஜ., அகில இந்திய தலைமை அறிவுறுத்தலின் படி உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று துவக்கப்பட்டுள்ளது. 45 நாட்கள் முகாம்கள் நடத்தப்படும். 2019 ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.88 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதனை தற்போது அதிகரித்து 4 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறோம் என்றார்.