/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனங்கிழங்கு விளைவிக்க கொட்டைகள் சேகரிக்கும் பணி; தை மாதம் அறுவடைக்கு வரும்
/
பனங்கிழங்கு விளைவிக்க கொட்டைகள் சேகரிக்கும் பணி; தை மாதம் அறுவடைக்கு வரும்
பனங்கிழங்கு விளைவிக்க கொட்டைகள் சேகரிக்கும் பணி; தை மாதம் அறுவடைக்கு வரும்
பனங்கிழங்கு விளைவிக்க கொட்டைகள் சேகரிக்கும் பணி; தை மாதம் அறுவடைக்கு வரும்
ADDED : செப் 04, 2024 12:58 AM

ரெகுநாதபுரம் : ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பனை மரங்களில் இருந்து ஏராளமான பனம்பழங்கள் பழுத்து கீழே விழுகின்றன. பனங்காடுகள் மற்றும் விளை நிலங்களில் வளர்ந்துள்ள பனை மரங்களில் இருந்து பனங்கொட்டைகளை சேகரித்து அவற்றை ஓரிடத்தில் மண்ணில் புதைத்து பனங்கிழங்கு விளைச்சலுக்கு தயார் செய்யும் பணியில் பனைத் தொழிலாளர்கள், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியபட்டினம் கொல்லம் தோப்பு விவசாயி பாண்டித்துரை: தற்போது பனை மரத்தில் இருந்து நன்கு பழுத்த மணம் வீசக்கூடிய பனம்பழங்கள் தானாக தரையில் விழுகின்றன. நுாற்றுக்கணக்கான பனை விதைகளை (கொட்டைகள்) சேகரிப்பு செய்யும் விவசாயிகள் அவற்றை மணற்பாங்கான இடத்தில் வரிசையாக அடுக்கி வைத்து அவற்றின் மீது மணலை மேவி வாரத்திற்கு இரண்டு முறை தண்ணீர் விட்டு பராமரிப்பார்கள்.
மழைக்காலங்களில் தண்ணீர் தேவையில்லை. அதே நேரம் அதிகமாக தண்ணீர் தேங்கி அழுகாமல் மழை நேரத்தில் பாதுகாக்க வேண்டும். முறையாக பராமரிப்பு செய்தால் கொட்டையில் இருந்து வெளிவரும் கிழங்கு நன்கு பருமனாகவும் திரட்சியாகவும் இருக்கும்.
ரெகுநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான தொழிலாக பனங்கிழங்கு விளைவிப்பது உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் பனங்கிழங்கு ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தை, மாசி மாதங்களில் விற்பனைக்காக பனங்கிழங்குகள் பறிக்கப்படுகிறது என்றார்.