/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ்சில் தவற விட்ட 15 பவுனை மீட்டுக்கொடுத்த டைம் கீப்பர்
/
பஸ்சில் தவற விட்ட 15 பவுனை மீட்டுக்கொடுத்த டைம் கீப்பர்
பஸ்சில் தவற விட்ட 15 பவுனை மீட்டுக்கொடுத்த டைம் கீப்பர்
பஸ்சில் தவற விட்ட 15 பவுனை மீட்டுக்கொடுத்த டைம் கீப்பர்
ADDED : ஏப் 29, 2024 06:07 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் தவற விட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகைகளை சாதுர்யமாக மீட்டுக்கொடுத்த ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக டைம் கீப்பர் வடிவேலுவை பொதுமக்கள் பாராட்டினர்.
மதுரை கோட்ட அரசு பஸ் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று காலை 11:30 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை மதுரை ஆசைத்தம்பி ஓட்டினார். கண்டக்டராக டி.கல்லுப்பட்டி கேசவ விநாயகம் சென்றார். இப்பஸ்சில் ராமநாதபுரம்கிழக்கு கடற்கரை சாலையில் சர்வீஸ் ஸ்டேஷன் நடத்தி வரும் இம்ரான்கான் 30, மனைவி ஜென்னத்ராதிகா 27, பாம்பனிலிருந்து உச்சிப்புளி வரை பயணித்தனர். இவர்கள் துணிமணிகள், 15 பவுன் நகைகள் வைத்திருந்த பையை பஸ்சில் வைத்து விட்டு இறங்கி வீடு சென்றனர். அங்கு சென்ற பின்பு தான் பையை பஸ்சில் தவற விட்டது தெரிந்தது.
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் சென்று பஸ்சை தேடி அழுது புலம்பிய அவர்களிடம் டைம் கீப்பர் வடிவேல் 50, விசாரித்தார்.
உடனடியாக பஸ் சென்ற நேரத்தை கணக்கிட்டு கண்டக்டர் கேசவவிநாயகத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டு இம்ரான்கான் பேக்கை குறித்த தெரிவித்தார். பஸ்சில் அந்த பை இருப்பதை கண்டக்டர் உறுதி செய்தார். பின்னர் வேறு ஒரு பஸ் மூலம் அந்த பை ராமநாதபுரத்திற்கு அனுப்பப்பட்டது. அதை டைம் கீப்பர் வடிவேலு இம்ரான்கானிடம் ஒப்படைத்தார். டைம் கீப்பரை பொதுமக்கள் பாராட்டினர்.
வடிவேல் கூறியதாவது: முப்பது ஆண்டுகளாக டைம் கீப்பராக பணி செய்கிறேன். இதுபோன்ற நேரங்களில் பயணிகள் அழுது புலம்புவதை விடுத்து அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும். பஸ்கள் வந்து செல்லும் நேரத்தை கணக்கிட்டு பையை தவற விட்ட பஸ்சை கண்டுபிடித்து கொடுத்தேன். மூன்று நாட்களுக்கு முன் 4 பவுன் நகையை மீட்டு கொடுத்தேன் என்றார்.

