/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் வீசிய பலத்த காற்றில் சாய்ந்தன மரங்கள்
/
முதுகுளத்துாரில் வீசிய பலத்த காற்றில் சாய்ந்தன மரங்கள்
முதுகுளத்துாரில் வீசிய பலத்த காற்றில் சாய்ந்தன மரங்கள்
முதுகுளத்துாரில் வீசிய பலத்த காற்றில் சாய்ந்தன மரங்கள்
ADDED : ஜூன் 02, 2024 03:32 AM

முதுகுளத்துார்,: முதுகுளத்துார் அருகே அ.நெடுங்குளம் கிராமத்தில் வீசிய பலத்த காற்றால் 10க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து ஆடு பலியானது.
முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த மூன்று நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. அப்போது முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த காற்று வீசியது.
இதில் முதுகுளத்துார் அருகே அ.நெடுங்குளம் கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள வேப்ப மரம், ஆலமரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. அப்போது அவ்வழியே சென்ற ஆடு மீது மரத்தின் கிளை விழுந்து உயிரிழந்தது.
இதே போன்று விக்கிரயாண்டியபுரம் கிராமத்தில் பலத்த காற்றால் வீட்டின் மேற்கூரைகள், ஓடுகள் பெயர்ந்து விழுந்து வீடு சேதமடைந்தது. இதே போன்று பல்வேறு கிராமங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.