ADDED : மே 07, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே குயவனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் உடையம்மாள் 61.இவரதுதம்பி கருப்பையா 55. இருவரிடையே இடப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் கருப்பையா அக்காள் உடையம்மாளை தாக்கினார். உடையம்மாள் புகாரில் திருப்பாலைக்குடி போலீசார் கருப்பையாமீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.