/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உப்பூர் பகுதியில் மீன் மார்க்கெட் வேண்டும்
/
உப்பூர் பகுதியில் மீன் மார்க்கெட் வேண்டும்
ADDED : மே 02, 2024 05:04 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க மீனவர்கள் வலியுறுத்தினர்.
கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளான உப்பூர், மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, கடலுார் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் ஏராளமான மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். மீன்பிடி தொழிலையே பிரதான தொழிலாக கொண்டுள்ள அப்பகுதி மக்கள் பிடித்து வரப்படும் மீன்களை முறையான மார்க்கெட் வசதி இல்லாததால் வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் நிலையில் உள்ளனர்.
இதனால், மீனவர்களுக்கு கால விரயம் ஏற்படுவதுடன் உடனடியாக மீன்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, மீனவ கிராமங்களுக்கு மையப்பகுதியான உப்பூர் பகுதியில் அரசு சார்பில் முறையான மீன் மார்க்கெட் அமைத்தால் பொதுமக்களும் ஒரே இடத்தில் பலவகை மீன்களை உடனுக்குடன் வாங்கி செல்லும் நிலை ஏற்படும்.
மீனவர்களின் வாழ்வாதாரமும் சிறக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் உப்பூர் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் வலியுறுத்தினர்.

